6 மாத கர்ப்பிணி செவிலியருக்கு பாலியல் தொல்லை... குமரியில் அதிர்ச்சி நித்திரவிளை அருகே செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் செம்மான்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 6 மாத கர்ப்பிணியான செவிலியரிடம், அலுவலக உதவியாளர் அசோக்குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெண் செவிலியர் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.