தமிழ்நாடு

சொந்த ஊருக்கு வந்த எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு நேர்ந்த கொடூரம்.. - காஞ்சியில் பரபரப்பு

தந்தி டிவி

மதுபோதை தகராறில் எல்லை பாதுகாப்பு படை வீரர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் அடுத்துள்ள முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் கனக சபாபதி.

எல்லை பாதுகாப்பு படை வீரராக இமாச்சல பிரேதேசத்தில்

பணியாற்றி வந்த இவர் , விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கிறார். இந்த நிலையில் தன் நண்பர் ஆனந்தராஜுடன் ஊத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தும் போது அங்கிருந்தவர்களுடன் கனக சபாபதிக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது, அப்போது அங்கிருந்தவர்கள் கனக சபாபதியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கனகசபாதி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த அவரின் நண்பர் ஆனந்த்ராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்