தமிழ்நாடு

நள்ளிரவு 2 மணிக்கு கேட்கும் `டம்..டம்' சத்தம் - குட்டிச்சாத்தான்கள் வேலையா? பீதியில் காங்கேயம்

தந்தி டிவி

காங்கேயம் அருகே வீடுகளின் மீது மர்மமான முறையில் கல் விழுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள ஓட்டபாளையம் காலனியில், வீடுகளின் மீது கல் விழுவதாக புகார் எழுந்துள்ளது. மாலை 7 மணி முதல் இரவு 2 மணி வரை, தொடர்ச்சியாக வீடுகளின் மீது மர்மமான முறையில் கல் விழுவதாகவும், இதனால் ஓடுகள் உடைந்து விடுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். போலீசார் முன்பாகவே கற்கள் விழுவதாகவும், முன்னோர் காலங்களில் கூறப்படுவது போல் குட்டிச்சாத்தான்களின் வேலையாக இருக்கலாம் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?