Kanchipuram | பெண் மரணம்.. ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு - கதி கலங்க விடும் காய்ச்சல் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழாங்கல்சேரி கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற இளம்பெண், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் வசித்த முத்தாலம்மன் தெருவில், 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து பலர் பாதிக்கப்பட்டும், மருத்துவ முகாம் நடத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக மருத்துவ முகாம் நடத்தி, கொசு ஒழிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்