தமிழ்நாடு

கொடுக்காத வாகனத்துக்கு சர்வீஸ் - மாற்றுத்திறனாளியை புலம்பவிட்ட ஷோரூம்

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிக்கு வழங்க வேண்டிய வாகனம் வழங்கப்படாமல் மூன்று மாதங்களாக இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது... செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் இவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்தியேக மூன்று சக்கர மோட்டார் வாகனத்திற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார். இதில், வாகனத்திற்கான ஆர்.சி புக் மட்டும் மூன்று மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனம் தற்போது வரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக மூர்த்தி குற்றஞ்சாட்டுகிறார். இதனிடையே, வழங்கப்படாத வாகனத்தை சர்வீஸ் செய்யக் கூறி, ஷோரூமில் இருந்து அவருக்கு அழைப்பு வருவதாக தெரிகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING | பரபரக்கும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் - மதுராந்தகத்தில் இறங்கிய அதிகாரிகள்

Brics | ஒன்று கூடிய உலகின் பெரும் தலைகள் - தலைப்புச் செய்தியாக மாறும் குரூப் போட்டோ

Modi | Putin | ஒரே காரில் வந்திறங்கிய மோடி, புதின்... தொழில் கண்காட்சியை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்

Ajith Kumar | AK | லண்டனில் இருந்து வெளியான அஜித் வீடியோ.. SMல் இதான் ட்ரெண்டிங்

டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றம் - ஐகோர்ட்டில் சொன்ன தமிழக அரசு