தமிழ்நாடு

"இருளில் மூழ்கி உள்ள அனந்தசரஸ் குளம்"- அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் அறநிலையத்துறையினரின் அலட்சிய போக்கினால் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்திவரதர் உற்சவத்தின் போது, 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர், மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டார். அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் கோயிலுக்கு வந்து அனந்தசரஸ் குளத்தை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில், அறநிலையத்துறையின் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் இரவு நேரங்களில் அனந்தசரஸ் குளத்தில் மின்விளக்கு எரியாமல், இருளில் மூழ்கி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, மின் விளக்குகளை அமைத்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு