தமிழ்நாடு

கோவிலில் செல்ஃபி எடுத்தவரை தலையில் அடித்த பெண் போலீஸ் : மயக்கம் அடைந்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஆகாஷ், தமது குடும்பத்தினருடன் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் உற்சவத்தை பார்க்க வந்துள்ளார்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஆகாஷ், தமது குடும்பத்தினருடன் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் உற்சவத்தை பார்க்க வந்துள்ளார். அத்தி வரதரை தரிசித்த பின்னர் அவர் கோவிலின் உள்ளே மூலவர் தேவராஜ சுவாமி சன்னிதானத்தில் செல்ஃபி, எடுக்க முயன்றுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட பெண் போலீஸ் ஒருவர் அவரை தலை மற்றும் கன்னத்தில் அடித்துள்ளார். இதில் மயக்கமுற்ற அவரை கோவில் ஊழியர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்