தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஸ்வீட் ஸ்டாலுக்கு சீல்வைப்பு : ரூ.7 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் நடவடிக்கை

காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் கன்னியப்பன் என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்வீட் ஸ்டால் உள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் கன்னியப்பன் என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்வீட் ஸ்டால் உள்ளது. இந்த ஸ்வீட் ஸ்டாலை ஈடாக காட்டி, சவுத் இந்தியன் வங்கியில் 7 கோடி ரூபாய் அந்த குடும்பத்தினர் கடன் பெற்றுள்ளனர். வாங்கிய கடனை பல ஆண்டுகளாக திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வங்கி நிர்வாகம் பலமுறை கடனைக் கேட்டு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், ஒரு கட்டத்தில், வங்கி நிர்வாகம், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பன் குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கியுள்ளது. இதற்கு பின்னரும் கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால், ஆட்சியரின் உத்தரவுப்படி, கன்னியப்பன் குடும்பத்தினர் ஈடாக காட்டிய ஸ்வீட் ஸ்டாலுக்கு வங்கி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியர் முன்னிலையில் சீல்வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு