காஞ்சிபுரம் மாகாளியம்மன் தெருவை சேர்ந்த ரேணுகா, கணவன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ரேணுகா, தனது இளைய மகள் புவனாவுடன் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றார். எனினும் குணமடையாததால் ரேணுகாவும் அவரது இளைய மகள் புவனாவும் மனவுளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கணவர் மற்றும் மூத்த மகள் வீட்டில் இல்லாத நேரத்தில், புவனாவுடன் ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியில் இருந்து வீடு திரும்பிய ரேணுகாவின் கணவர் அன்பு, கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.