தமிழ்நாடு

மதுபோதையில் மகனை தொலைத்த தந்தை...

மதுபோதை​யில் தந்தை தொலைத்த மகனை ஒரே நாளில் கண்டுபிடித்து பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர், குமரபிரசாத். இவர் தனது 5-வயது மகன் குமரகுருவுடன் ஒரகடம் சென்று, மது வாங்கி குடித்துள்ளார். போதை தலைக்கேறியதால், அவர் சாலையிலேயே தூங்கிய அவர், போதை தெளிந்து பார்த்தபோது மகனை காணாததால், போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்த, சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீசார், மர்ம நபர் ஒருவர் குழந்தையை அழைத்து செல்வதை அறிந்து, 3 தனிப்படைகள் அமைத்து தேடினர். இந்நிலையில் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அனாதையாக நின்றிருந்த குமரகுருவை போலீசார் மீட்டு வந்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனந்த கண்ணீருடன் போலீசாருக்கு குமரபிரசாத் நன்றி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்