காஞ்சிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த பெண்மருத்துவர் அஞ்சலியிடம் கத்தி காட்டி மிரட்டி 25 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மருத்துவர் அஞ்சலியின் கார் ஓட்டுனர்கள் சொளந்தர்ராஜன், ராஜா ஆகிய இருவரும் தங்களது நண்பர்கள் ரவி,அஜய் மற்றும் ஹரீஷுடன் இணைந்து நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.