தமிழ்நாடு

மியா தூக்கிய பால்குடம் ..! பரபரப்பான ஊர்... என்ட்ரி கொடுத்த போலீசார்... ஆடிப்போன ஆடி திருவிழா

தந்தி டிவி

திருவிழா பேனரில் கவர்ச்சி நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...எங்கு நடந்தது?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவை பால்குடம் தூக்க வைத்து அழகு பார்த்துள்ளனர் இந்த 2 கே புள்ளிங்கோ...

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில்...

இங்கு வீற்றிருக்கும் நாகாத்தம்மனுக்கும் செல்லியம்மனுக்கும் ஊர் மக்கள் ஆடி மாதத்தின் போது பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம்...

அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை முன்னிட்டு ஆங்காங்கே திருவிழா பேனர்கள் ஊரை அலங்கரித்து வருகின்றன...

எல்லாவற்றையும் எப்போதும் போல் கடந்து சென்ற நமக்கு திடீரென வித்தியாசமாக தென்பட்டது ஒரு பேனர்...

கண்ணாடி போட்டுக் கொண்டு பால்குடம் ஏந்தி யாரோ ஒரு பெண் பக்திப்பரவசமாக நின்று கொண்டிருந்தார்...

பக்கத்தில் போய் பார்த்த போதுதான் தெரிந்தது பால் குடம் தூக்கிக் கொண்டு நின்றது பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிஃபா என்பது...

அதிலும் பேனருக்கு ஏதோ மாலை போட்டதைப் போல சுற்றிலும் ஆதார் ஆதாரத்துடன் பெருமிதமாக போஸ் கொடுத்து அலங்காரம் வேறு...

அம்மன் திருவிழா சார்ந்த பேனரில் ஆபாச பட நடிகை படமா என பெரும் சர்ச்சைகள் எழ...காவல்துறையினர் அந்த பேனரையே அகற்றி விட்டனர்...

90ஸ் கிட்ஸைக்கூட ஏதாவது ஒரு ரகத்தில் சேர்த்து விடலாம் போல...ஆனால் இந்த 2கே கிட்ஸை எந்த ரகத்தில் வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை...அந்தளவு எல்லைமீறி போய்க் கொண்டிருக்கிறது இவர்களின் சேட்டை...

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்