தமிழ்நாடு

திருப்போரூர் : 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் பொறியியல் 4ஆம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த சையத், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். தனது அறையை தானியங்கி பூட்டு மூலம் பூட்டிக் கொண்டு வெளியே வந்த போது, சாவியை உள்ளே வைத்து விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மொட்டை மாடியில் இருந்து கயிற்றின் மூலம் பால்கனி வழியே இறங்கி, அறைக்குள் சென்று சாவியை எடுக்க முடிவு செய்த சையத், மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில்,14வது மாடியிலிருந்து கீழே விழுந்த அவர் தலை சிதறி உயிரிழந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்