காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிள்ளைப்பாக்கம் சிப்காட் சந்திப்பில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முடிச்சூரிலிருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி வந்த காரை மறித்து ஆய்வு செய்தனர். அப்போது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்த அதிகாரிகள், போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கைது செய்த போலீசார், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..