தமிழ்நாடு

kanchipuram | ஆடி முதல் ஞாயிறு - அம்மனுக்கு படையல் வைக்க மீன் மார்க்கெட் படையெடுத்த மக்கள்

thanthitv

ஆடி முதல் ஞாயிறு - அம்மனுக்கு படையல் வைக்க மீன் மார்க்கெட் படையெடுத்த மக்கள் ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் படையல் நிகழ்ச்சிக்காக பொன்னேரிக்கரை மீன் மார்க்கெட், தர்கா பகுதி இறைச்சிக் கடைகளில் ஏராளமானோர் தங்களுக்குத் தேவையான மீன் மற்றும் இறைச்சி வகைகளை வாங்கிச் செல்கின்றனர். மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம், கொடுவா, இறால், நெத்திலி, மத்தி, நண்டு உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகள் ரூ.400 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆட்டிறைச்சி, கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விற்பனையும் அதிகரித்தது. ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி விற்பனை அதிகரித்ததால் மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

CJP Protest | டெல்லியை அலறவிடும் கரப்பான் பூச்சி கட்சி.. அவசரமாக இழுத்து மூடல்

Vilathikulam DMK MLA Arrest | அதிரடி கைது - திமுக MLA மீது பாய்ந்த `அந்த’ 3 செக்‌ஷன்

CJP | Delhi | களத்தில் இறங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.. முழு பாதுகாப்பில் ஜந்தர் மந்தர்

DMK MLA Arrest |CM விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு - விளாத்திக்குளம் திமுக MLA கைது

DMK MLA Arrest | காலையிலேயே பரபரப்பு - திமுக MLA அதிரடியாக கைது