கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, பொதுஇடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் முன், கட்டுமான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு காத்திருந்தனர். அங்கிருந்த தங்களது பணியிடங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் புறப்பட்டனர். இதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.