காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதர் வைபவத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவையை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி , மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கோவை கொண்டு செல்லப்பட்டது. அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்ட பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழக அரசால் வழங்கப்படும் அண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி என்பது குறிப்பிடத்தக்கது.