தமிழ்நாடு

நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் செய்த பகீர் காரியம் ...காஞ்சிபுரம் அருகே அதிர்ச்சி சம்பவம்

நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் செய்த பகீர் காரியம் ...காஞ்சிபுரம் அருகே அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள புஷ்பகிரி பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமசாமி - குழந்தையம்மாள் . இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஐந்து வீடுகளைக் கட்டி வாடைக்கு விட்டுவிட்டு, அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டில் நள்ளிரவு இரண்டு மணி அளவில் புகுந்த இரு நபர்கள் அம்மிக்கல்லைக் கொண்டு பூட்டை உடைத்துள்ளனர். இதன் பின் உள்ளே சென்ற மர்மநபர்கள் ராமசாமியைக் கீழே தள்ளவிட்டதால் காயமடைந்து இருக்கிறார். பின்னர் குழந்தையம்மாளிடம் இருந்த தங்க செயின் உட்பட ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பறித்துள்ளனர். மேலும் சத்தம் போட்டால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிடுதாக மிரட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்