தமிழ்நாடு

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - இளைஞர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது நடத்தப்பட்ட, கொடூரத் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றி வரும் ஜெயந்தி சீனிவாசன் மேல் கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன், இவருக்கும் அதே குடியிருப்பின் வசித்து வரும் ஓய்வுபெற்ற காவலரின் மகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஓய்வுபெற்ற காவலரின் மகன், ஜெயந்தியை கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம் தாளம்பூர் காவல் நிலையத்தில், ஜெயந்தி புகார் அளித்தார். அதில், தன்னை தாக்கிய ஓய்வுபெற்ற காவலரின் மகன், கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அதை தட்டிக் கேட்டபோது தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்