தமிழ்நாடு

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மீனவகுப்பம் பகுதியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் கமலி ஸ்கேட்டிங் சறுக்கு விளையாட்டில் சிறந்து விளங்குவதை கண்டு அப்பகுதி மக்கள் வியந்தனர். மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஸ்கேட்டிங் வீரர் ஜேமி தாமஸ், சிறுமியின் சறுக்கு விளையாட்டை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த இயக்குநர் ஷாஷா என்பவர் கமலி வாழ்க்கை சூழல் குறித்து குறும்படம் தயாரித்துள்ளார். அது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனாவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் சிறுமி கமலி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்