திருப்பூர் மாவட்டத்திற்கு சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தாராபுரம் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அந்த பகுதியில் வசித்து வரும் டாஸ்மாக் ஊழியர் மோகன் என்பவரின் குழந்தைக்கு 'ஆதிரை' என கமல் பெயர் சூட்டினார்.