கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பை சேர்ந்த குப்தா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உங்களுக்கு என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்ப, தாம் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்ததாக மனுதாரர் விளக்கம் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கமல் பேசிய வீடியோ ஆதாரத்தை சமர்பிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.