தமிழ்நாடு

கணவரான எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு அனுமதி - திருமண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமண விவகாரத்தில் கணவரான எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல அனுமதி அளித்து சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு- சவுந்தர்யா திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி தனது மகளை திருமணம் செய்ததாக கூறி சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சவுந்தர்யா மற்றும் அவரது தந்தை இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். இந்நிலையில் கணவருடன் செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

"எம்.எல்.ஏ. பிரபு துரோகம் செய்துவிட்டார்..." - சுவாமிநாதன், சவுந்தர்யாவின் தந்தை

எம்.எல்.ஏ. பிரபுவோடு சென்ற தனது மகள் சவுந்தர்யா, தன்னுடன் வர மறுத்துவிட்டதாக அவரது தந்தை சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு