"என்னால முடியல... கொடும படுத்துறாங்க" - குவைத்தில் சிக்கி கதறும் தமிழக பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, குடும்ப வறுமை காரணமாக வீட்டு வேலைக்காக குவைத் சென்ற நிலையில், அங்கு கடந்த இரண்டு மாதங்களாக சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். 50 நாட்களுக்கும் மேலாக உணவின்றி தவிப்பதாகவும், தன்னை தமிழகம் அழைத்து வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.