தமிழ்நாடு

ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் வந்த, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் வந்த, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, ரோடு மாமாந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வந்த அரசு பேருந்தில் 36 சாக்கு மூட்டைகளில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் என்கிற குட்கா புகையிலை இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கள்ளக் குறிச்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து , அவற்றை கொண்டு வந்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை