103 ஆண்டுகள் பாரம்பரியமிக்க காளிமார்க் நிறுவனம், ஜிப்ஸி, இளநீர், பழரசங்கள் உள்பட 30 வகையான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில், அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நடிகைகள் நிக்கி கல்ராணி, அக் ஷரா ஹாசன் சமையல் கலை நிபுணர் தாமு ஆகியோர் கலந்துகொண்டு 30 வகையான புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைத்தனர். காளிமார்க் குழும நிர்வாகிகள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.