தமிழ்நாடு

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்... 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தந்தி டிவி

சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் புகாரில், புலன் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, 250 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்

கடந்த மார்ச் மாதம், கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர், பேராசிரியர் ஹரிபத்மன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேராசிரியர் ஹரிபத்மனை கைது செய்தனர். இதனிடையே, பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள் மற்றும் பேராசிரியர் என 60க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். புலன் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, 250 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்