தமிழ்நாடு

கருணாநிதி பிறந்தநாள் - புதிய திட்டங்கள் அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 6 புதிய திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதன்படி சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 70 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படுமெனவும், அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி போன்ற விருது பெற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் விரும்பும் இடத்தில் தமிழக அரசு மூலம் வீடு வழங்கப்படுமென கூறப்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் அமைக்கபடுமெனவும்,

திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நகர்புறப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்