சென்னை கதீட்ரல் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கண்ணாடி மாளிகை மற்றும் super tree டவர் அமைக்க தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை டெண்டர் கோரி உள்ளது. 7 கோடி ரூபாய் செலவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட உள்ள இந்த கண்ணாடி மாளிகையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு பூக்கள் இடம்பெற உள்ளன. இதேபோல் 30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ள super tree டவரைச் சுற்றியும் பூக்கள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.