தியாகி சங்கரலிங்கனார், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்ளிட்டோருக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டது அதிமுக அரசு என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், தமிழை வளர்க்க பாடுபடுவதாக தற்போது கூறுபவர்கள், அரசியலுக்காக அப்படி பேசுவதாக விமர்சித்தார்.