இன்றோ, நாளையோ ஆட்சி மாறிவிடும் என பகல் கனவு கண்டவர்களின் கனவுகள் தவுடுபொடியாக்கி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஓட்டபிடாரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஓட்டபிடாரம் தொகுதியில் திமுக டெபாசிட்டை இழந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.