கூடுதல் சிறப்பாக, திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் பகுதியில் கடந்த ஆண்டு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும், டாப்சிலிப் முகாமில், தலைப் பொங்கலை கொண்டாடியது. சின்னதம்பியுடன் சுற்றுலாபயணிகள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
யானைகளுக்கு கரும்பு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
காணும் பொங்கலை கொண்டாட டாப்சிலிப்பிற்கு வந்த நிலையில், யானைகளுடன் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் தெரிவித்தனர்.