தமிழ்நாடு

ஆசிரியர் மீது கொண்ட அதீத அன்பால்.. அவரது திருமண வரவேற்ப்பில் குவிந்த மாணவர்கள்

தந்தி டிவி
• ஆசிரியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு பரிசுப்பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தாம்பரத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விக்னேஷ் என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார். மிக இளைய வயது என்றாலும், இவரது தனி பாணியிலான கற்பித்தல் முறை, மாணவர்களை நண்பர்களாக அணுகும் முறை, சலிப்பின்றி இரவு கூட பாடம் நடத்தும் பாங்கு போன்றவை மாணவர்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி படப்பையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆசிரியர் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில், இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, திரைப்பாடலுக்கு தனது புது மனைவி பிரதிஷாவுடன் ஆசிரியர் விக்னேஷ் நடனமாடியதால், மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்