மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க.அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.