தமிழ்நாடு

ஜூன் 1 முதல் தமிழகத்துக்குள் ரயில் சேவை...

ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்திற்குள் நான்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

தந்தி டிவி

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

கோவை -மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.

*கோவையில் காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.

* மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும்

* இதேபோல மதுரை-விழுப்புரம்-மதுரை அதி விரைவு சிறப்பு ரயிலானது, மதுரையில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு 12.05 மணிக்கு விழுப்புரம் வரும்.

* பின்னர், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* இதேபோன்று திருச்சி-நாகர்கோவில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை இடையேயும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

* இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்குகிறது.

* ரயில்கள் புறப்படும், சேரும் மற்றும் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் குறைந்த பட்சம் 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்