தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில், பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை கூறினர்.