தமிழ்நாடு

51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை.. கையோடு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்

தந்தி டிவி

51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை.. கையோடு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் நம் நாட்டின் அரசு ஊழியர்கள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51 ஆயிரம் இளைஞர்களுக்கு, பிரதமர் மோடி காணொலி வாயிலாக நியமனக் கடிதங்களை வழங்கினார். பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்திய அரசால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில்கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறினார். பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்