இந்த அசைவ விருந்தில், காரம் நிறைந்த தக்காளி ரசம், மலாபர் இறால், கோழி குழம்பு, தேங்காய் கலந்த ஆட்டுக்கறி, கருவேப்பிலை மீன் வறுவல், தஞ்சாவூர் கோழிக்கறி, இறைச்சி கெட்டி குழம்பு, புளிச்சகீரை சூப், சுண்டைக்காய் குழம்பு, ருசியான சாம்பார், ஆந்திராவின் ஸ்பெஷல் பிரியாணி, பல வகையான ரொட்டி துண்டுகள், அட பாயாசம், கருப்பு அரிசியில் தயார் ஆன அல்வா, முக்கனிகளால் தயார் செய்யப்பட்ட ஐஸ் கிரீம் ஆகியவை, விருந்து உணவு பட்டியலில் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.