திருச்சி நகை கடை மற்றும் பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில், கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த திருச்சி ஜே.எம்- 2 நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் திரிவேணி , வருகிற 16ஆம் தேதி வரை சுரேஷ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கொள்ளையன் சுரேஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த, 2017ஆம் ஆண்டு, திருச்சி கே.கே.நகரில் நடந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.