தமிழ்நாடு

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஜீவ சமாதி என்ற பெயரில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை

மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம், விழா கமிட்டியை சேர்ந்த கண்ணன் ஆனந்த் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்த நிலையில், ஆய்வாளர் சீராளன் தலைமையில் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளிகளான லெட்சுமணன், கர்ணன் ஆகிய 2 பேரை தேடி வருகிறனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வாளர் சீராளன், ஆன்மீகத்தின் மீது உள்ள அதீத நம்பிக்கையால் மக்கள் மோசடி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்