தமிழ்நாடு

Jayaranjan | ``இந்தியாவையே பீட் செய்த தமிழ்நாடு’’ - புள்ளிவிவரத்தோடு கிளியராக அடித்த ஜெயரஞ்சன்

``இந்தியாவையே பீட் செய்த தமிழ்நாடு’’

thanthitv

#tamilnadugdp #tamilnadueconomy #jayaranjan தமிழ்நாட்டில் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு உறுதி என ஜெயரஞ்சன் தகவல் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு நிச்சயமாக அடையும் என்று மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்... தற்போது மாநிலத்தின் பொருளாதார அளவு ரூ.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், வளர்ச்சி விகிதம் 11.03% எனவும், இது இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்... 2025–26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 260 பக்கங்களுடன் 10 பிரிவுகளாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி, வேலைவாய்ப்பு, துறைவாரியான வளர்ச்சி உள்ளிட்ட மாற்றங்கள் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்... மாநிலத்தில் 25% பேர் மட்டுமே வேளாண் துறையை சார்ந்தவர்கள் எனவும், தொடர்ந்து வேளாண் துறை பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்... உற்பத்தித் துறை 14% வளர்ச்சியடைந்துள்ளதுடன், எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனங்களில் 90% வரை பெண்கள் பணியாற்றுகின்றனர் எனவும் கப்பல் கட்டும் தொழிலுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றம் காரணமாக வேளாண் துறையில் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சோலார் மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் சேமித்து பயன்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நகர்ப்புற வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கை அதிகரிக்க குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் அவசியம் எனவும், சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளில் தமிழகத்தை திறன்மிக்க மையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?