தமிழ்நாடு

Jayankondam | வீட்டில் பிணமாக தந்தை... "என் அப்பாவின் ஆசை" கண்ணீரோடு வணங்கி தேர்வுக்கு சென்ற மகள்

வீட்டில் பிணமாக தந்தை... "என் அப்பாவின் ஆசை" கண்ணீரோடு வணங்கி தேர்வுக்கு சென்ற மகள்

thanthitv

வீட்டில் பிணமாக தந்தை... "என் அப்பாவின் ஆசை" கண்ணீரோடு வணங்கி தேர்வுக்கு சென்ற மகள் ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தில் தந்தை உயிரிழந்த நிலையிலும், மகள் தனது பிளஸ் டூ பொதுத்தேர்வை எழுதச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அங்கராயநல்லூர் கிராமத்தில் கார்த்திகா என்ற பிளஸ் டூ மாணவியின் தந்தை அழகேசன் அதிகாலை திடீர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இதனால் கார்த்திகா பெருஞ்சோகத்தில் இருந்தாலும், பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தான் மேற்படிப்பிற்கு செல்வதே தனது தந்தையின் ஆசை என்று கூறி தனது தந்தையின் சடலத்தை வணங்கி தேர்வுக்கு தயாராகி சென்றது காண்போரை கண்ணீர் சிந்த வைத்தது. லாரி ஓட்டுனரான அழகேசன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவரின் உயர் கல்விக்கு அரசு உதவ வேண்டும் என உறவினர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்