ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த செயல் தொண்டர்களின் மனதை வேதனையிலும் பெரும் கொதிப்பிலும் ஆழ்த்தியுள்ளதாகவும் பதிவிட்டுள்ள தினகரன், ஜெயலலிதாவுக்கு உரிய மரியாதை எப்பொழுதுமே செலுத்த நினைக்காத முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவருக்கும் உண்மைத் தொண்டர்களின் சார்பாக தமது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் தினகரன் கூறியுள்ளார்.