தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது, அரசு தன்அதிகார வரம்புக்கு உட்பட்டது தான் முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார். மேலும், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்