தமிழ்நாடு

மருத்துவமனையில் ஜெயலலிதா உணவு செலவு ரூ.1.17 கோடி - அப்பலோ நிர்வாகம்

மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ. 1.17 கோடி செலவானது - அப்பலோ நிர்வாகம்

தந்தி டிவி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உணவுக்கு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூயாய் செலவாகியுள்ளது.ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவசெலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலேக்கு 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், பிசியோதரப்பி சிகிச்சைக்காக 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாய் சிங்கபூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கான அறை வாடகையாக 24லட்சத்து 19 ஆயிரத்து 800 ஆகியுள்ளது. ஆனால் பொதுவான அறை வாடகையாக 1 கோடியே 24 லட்சத்து 479ஆயிரத்து 910 என்றும் உள்ளது.

மருத்துவ செலவுக்கான பணத்தை கடந்த 2016 அக்டோடபர் 13 ம் தேதி காசோலையாக 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு 2017 ஜூன் 15 ம் தேதி அதிமுகவின் கட்சி சார்பாக காசோலையாக 6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ செலவில் 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாயில் , 6 கோடியே 41 லட்சத்து 13 லட்சத்து 304 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் அப்பல்லோவிற்கு இன்னும் தர வேண்டியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு