மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரிதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவில்லாமாக மாற்றும் பணி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்க அளிக்க கோரியும் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.