மதுரை திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடத்தில் ஜப்பானிய நிதிக் குழு ஆய்வு மேற்கொண்டது. எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், 7 பேர் கொண்ட ஜப்பானிய நிதி மானிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அடிப்படை கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் ஜப்பானிய நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி பெறப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட வேலைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.