தமிழ்நாடு

ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும்13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

* இந்நிலையில், பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

* அதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* இதில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 458 பேரும்,

குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 696 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

* பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் என மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* இதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ

தெரிவித்துள்ளார்.

CM Vijay | Trichy | கிளம்பும் CM விஜய்.. மகிழ்ச்சியில் குடும்பம் குடும்பமாக வரும் தொண்டர்கள்

CM Vijay | உச்சநீதிமன்ற நீதிபதியாக வி.மோகனா நியமனம்.. CM விஜய் வாழ்த்து

K Annamalai | BJP | "அண்ணாமலை சொன்ன வார்த்தை இதுதான்" - அழுத்தி சொன்ன JVC ஸ்ரீராம்

BJP | K Annamalai | தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை? - திடீர் டெல்லி பயணம்

Central Health Department | "யாரும் வெளியே போகாதீங்க.." - அலர்ட் கொடுத்த மத்திய சுகாதாரத்துறை