சென்னை ஈ.சி.ஆர் சாலையில், உணவகத்திற்குச் சென்ற இடத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாலவாக்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஜேம்ஸ் வசந்தன், உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். உணவை முடித்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.