தமிழ்நாடு

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய வீரர்கள்

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய வீரர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் ந‌த்தமாடிபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி, கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து, 400 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. 500 மாடு பிடி வீர‌ர்கள் காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நொடிக்கு நொடி விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

பழனி பெரியகலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் கலந்துகொண்ட பல காளையர்கள், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்டனர். அப்போது, மாடுகள் முட்டியதில் சில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ராசாண்டார் திருமலையில் 57 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன், போட்டிகளை துவக்கி வைத்தார். மத்திய அரசின் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் கே.எஸ்.மிட்டல் போட்டிகளை கண்காணித்தார். இந்த போட்டியில் 600 மாடுகள் கலந்து கொண்ட நிலையில் 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன் தலைமையில், 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியர் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி விரர்கள் 15 பேர் காயம் அடைந்தனர். இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி